சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஏத்தாப்பூரை சேர்ந்தவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.
இதனையடுத்து வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர், இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து வாகன உரிமையாளர் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.