தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழாவில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
கண்காட்சியில் சிப்பிப்பாறை, ராஜபாளையம் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 17 வகையான இனங்களைச் சேர்ந்த நாய்கள் பங்கேற்றன.
இனம் வாரியாக நடைபெற்ற இந்த கண்காட்சியில் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய் தொற்றுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.