தஞ்சையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாப்பநாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் ஒருவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிற்து. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி அழகேசன் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காதது ஏன் என வரும் 27-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என முதன்மை மருத்துவ அலுவலருக்கு உத்தரவிட்டார்.