தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சுமங்கலி பூஜையில் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பழம், தேங்காய், உள்ளிட்ட மங்கல பொருட்களை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.