ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறிவிழுந்த காட்டெருமை நீண்ட நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற காட்டெருமை புதுகுய்யனூர் கிராமத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
இதனையடுத்து கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த காட்டெருமையை கண்ட விவசாயி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் காட்டெருமையை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.