பெரம்பலூரில் கழிவுநீர் சாலையில் ஓடுவதை கண்டித்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.
திடீர் மழை காரணமாக சாலையில் கழிவுநீருடன் மழைநீர் பெருக்கெடுத்தது. கடைகள் மற்றும் வீடுகளிலும் கழிவு நீர் புகுந்ததால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.