பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கவுல்பாளையம், சிறுவாச்சூர், ஆலத்தூர்கேட், பாடாலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் வாட்டிய நிலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது.
நீண்ட நேரம் மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.