திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே மணல் ஏற்றி சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
மீஞ்சூர் அருகே சவுடு மணல் ஏற்றிக்கொண்டு 3-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது பின்னால் சென்ற வாகனங்களுக்கு வழிவிடாமலும், தட்டிக்கேட்டவர்களை லாரி ஓட்டுநர்கள் அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் லாரிகளை சிறைப்பிடித்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.