மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த தந்தை- மகன் கைது செய்யப்பட்டனர்.
குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளரான ஜோதிராமன், தனது போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வாகனத்தை மறித்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த கிஷோர் என்ற இளைஞரை அழைத்த ஜோதிராமன், அவருடைய செல்போனை பறித்துச் சென்றுள்ளார்.
இதனை அறிந்த இளைஞரின் தந்தை மகேஸ்வரன் காவல்நிலையத்துக்கு சென்று ஜோதிராமனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தந்தை மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.