சென்னை அடுத்த நீலாங்கரையில் பெண் காவலரை ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்டவருக்கு வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
வெட்டுவாங்கெணியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விவேக், சாலை விதியை மீறி வாகனம் இயக்கியதையடுத்து அவரிடம் பெண் காவலரான பிரியா விசாரணை மேற்கொண்டார். அப்போது பிரியாவை விவேக் ஆபாசமாக திட்டியுள்ளார். இதுகுறித்து பிரியா புகாரளித்த நிலையில் விவேக் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு வாரத்துக்கு போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விவேக்குக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார்.