மதுரையில் கனமழை காரணமாக பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், மேல மாசி வீதியில் உள்ள பழமையான கட்டிடம் சரிந்து விழுந்தது.
அருண்குமார் என்பவருக்கு சொந்தமான இக்கட்டிடத்தில் இனிப்புப் பலகாரங்கள் செய்யும் பணி நடைபெற்றதாகவும், கடந்த ஒரு வாரமாக பணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.