அரியலூர் மாவட்டம் த.பழூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கீழசிந்தாமணி கிராமத்தை சேர்ந்த முருகேசன் பட்டப்படிப்பு முடித்த தனது மகனுக்கு வேலை தேடி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் கார்த்திகேயன், அரசு வேலைவாங்கித் தருவதாக கூறி முருகேசனிடம் 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய முருகேசன் முன்பணமாக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் இருவரும் வேலைவாங்கித் தராமல் ஏமாற்றியதால் இதுகுறித்து முருகேசன் புகாரளித்தார். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.