மிகப்பெரிய சதிகளை தெரிந்து கொண்டதால் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோரும், சக மருத்துவர்களும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மருத்துவரின் டைரியில் இருந்து, அவர் கடந்த சில வாரங்களாக மன அழுத்தத்தில் இருந்தது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கைதான சஞ்சய் ராய், வெறும் பலியாடு தான் என்றும், இவ்விவகாரத்தின் பின்னணியில் செல்வாக்குள்ள பலர் இருக்கலாம் என்றும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.