மகளிர் தங்கும் விடுதி திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுமென்றே மறைத்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அருகே உள்ள வல்லம் – வடகாலில், ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்காக 707 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மலிவு விலை வாடகை வீடுகள் வளாக திட்டத்தை 2020-ல் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாகவும், அதில் இடம்பெற்ற ஐந்து திட்டங்களில் தமிழகமும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
வல்லம்-வடகாலில் திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி, மத்திய அரசின் நிதி 37 கோடியே 44 லட்ச ரூபாய் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து 498 கோடி கடன்பெற்று கட்டப்பட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மகளிர் தங்கும் விடுதி திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு நிதியை குறிப்பிடாமல் முதலமைச்சர் வேண்டுமென்றே மறைத்துவிட்டாரா என அந்தப் பதிவில் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.