ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் 6 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதால், சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் வெளியே வந்து முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அதிருப்தியில் இருந்து வந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து தற்போது விலகியுள்ளார்.
தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் 6 பேருடன் சம்பாய் சோரன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதையொட்டி, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தலைநகர் வந்திருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் சம்பாய் சோரன் பாஜகவில் இணைவது தொடர்பாக, மேற்கு வந்த பாஜக தலைவரை சந்தித்ததாகவும், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹானுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.