கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே லாரியில் கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். ஒடிசாவில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக மத்திகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கலுகொண்டப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், ஓட்டுனர் இருக்கைக்குப் பின்னால் 20 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து மதுரைக்கு கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.