வங்கதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டன.
வன்முறை சம்பவங்களையடுத்து, வங்கதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் காலவரையின்றி மூடப்படுவதாக கடந்த ஜூலை 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு, அங்கு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.