ஜெர்மனியின் லேப்சிக் பகுதியில் ராட்சத ராட்டினத்தில் தீ விபத்து ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஸ்டார்ம்தாலர் ஏரியின் அருகே பிரம்மாண்ட இசைத்திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற நிலையில் அங்குள்ள ராட்சத ராட்டினத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
பின்னர் கரும்புகை மற்றும் தீ விபத்தில் சிக்கி 23 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.