தாய்லாந்தின் புதிய பிரதமராக பெடோங்டர்ன் ஷினவத்ரா முறைப்படி பதவியேற்றார்.
தாய்லாந்தில் பிரதமராக இருந்த ஸ்ரேத்தா தவிஸ் குற்றவழக்கு நிலுவையில் இருந்த நபரை அமைச்சராக நியமித்ததற்காக பிரதமர் பதவியில் இருந்து அவரை அதிரடியாக நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ரா பதவியேற்றார்.
முன்னதாக அவர் நாட்டின் நன்மைக்காக செயல்படுவேன் எனவும் அனைத்து தரப்பினருக்கும் சமமான சட்டம் செயல்படுத்தப்படும் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.