இஸ்ரேலில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல் அவிவ் நகரில் பயங்கர சத்ததுடன் குண்டுவெடித்தது.
இதில் நபர் ஒருவர் உடல்சிதறி உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த நபர் மனித வெடிகுண்டாக செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தளபதி பெரிட்ஜ் அமர் தெரிவித்துள்ளார்.