டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக அவர் இந்த விபரீத முடிவைத் எடுத்ததாக தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் போலீஸார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.