கேரளா மாநிலம், இடுக்கியில் மழை வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த பாதிரியாரை அப்பகுதி மக்கள் காப்பாற்றினர்.
பாதிரியார் காரில் அங்குள்ள ஒரு ஓடையை கடக்க முயன்ற போது மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது. நூறு மீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பாதிரியாரை பத்திரமாக மீட்டனர்.