மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியில் கர்ப்பிணி யானையைப் பொதுமக்கள் தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலில் காயத்துடன் அப்பகுதியில் வலசை வந்த யானையை பொதுமக்கள் தீப்பந்தத்தை வைத்து எரித்துள்ளனர்.
இதில் தீக்காயம் அடைந்த யானை, பலத்த சப்தத்துடன் பிளிறி, உயிரை விட்டது. வனத்துறை அலுவலர்களின் உதவியுடன் தான் யானை தீவைத்து கொல்லப்பட்டதாக சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
















