சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், 6-3 7-5 என்ற நேர் செட்களில் பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.