கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.