துக்ளக் இதழின் நிறுவனரும், நாடகத் துறை, திரைத்துறை, அரசியல் என பல துறைகளில் முத்திரை பதித்தவருமான அமரர் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.