தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல் இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி, அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மூத்த அமைச்சர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், புதிதாக 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என தெரிகிறது.
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றமும் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.