பெண் மருத்துவர் பாலியல் கொலை நடைபெற்ற மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மீது அங்கு பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை சுமத்திய முன்னாள் மருத்துவக் கண்காணிப்பாளரான அக்தர் அலி, மருத்துவமனையில் உரிமம் கோரப்படாத சடலங்களை சந்தீப் கோஷ் பணத்துக்கு விற்றதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மீது ஏற்கெனவே வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறிய அவர், மருத்துவக் கழிவுகளையும் மருந்து பொருட்களையும் வங்கதேசத்துக்கு சந்தீப் கோஷ் கடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய், மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வருக்கு உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.