அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களால் ரஷ்யாவின் பாலங்களை தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
தற்போது ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமித்து வரும் உக்ரைன் ராணுவம் தங்களை பாதுகாக்கவும் எதிரிகளை அழிக்கவும் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் முக்கிய பாலங்களை அமெரிக்க அரசு அனுப்பிய ஆயுதங்களை கொண்டு தகர்த்ததாகவும் மேலும் போருக்கு அந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
















