மதுரை – போடி அகல ரயில் பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டப்பணி நிறைவடைந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் மாதந்தோறும் ஓஎம்எஸ் என்ற அலைவு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டங்கள் நடைபெறும். அந்த வகையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.