சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சைக்கிளில் சென்று விழிப்புணர்பு ஏற்படுத்தி வரும் மேற்குவங்க தம்பதிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மேற்குவங்கத்தை சேர்ந்த பிரதீப் பிஸ்வாஸ்-சங்கீதா தம்பதி சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும், பசுமை இந்தியாவை உருவாக்கவும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேற்குவங்கத்தில் இருந்து தொடங்கிய தம்பதியின் பசுமை பயணம் 10 மாதங்களை கடந்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வந்த தம்பதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுவரை சைக்கிள் பயணமாக 13 மாநிலங்கள் வழியாக 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளதாகவும், தற்போது கிழக்கு கடற்கரை சாலை வழியாக கொல்கத்தா செல்ல உள்ளதாகவும் தம்பதி தெரிவித்தனர்.