பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிதியை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் அனில் அம்பானிக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்த செபி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ இருக்கவும் அனில் அம்பானிக்கு தடை விதித்தது.
அதோடு, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு ஆறு மாதங்களுக்கு தடை விதித்துள்ள செபி, அந்த நிறுவனத்துக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.