சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறையாக நடத்தப்படும் எனவும், தேர்வுக்கு பிறகு முடிவுகளை உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி தெரிவித்தார்.