மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாக்குடி சாலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் தனது நண்பர் ஜெயசீலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் புருஷோத்தமன் என்பவரும் வந்துள்ளார்.
கதிராமங்கலம் மெயின் ரோடு பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதியது. இதில் 3 பேரும் உயிரிழந்த நிலையில் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.