நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமாரும், அவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ள வருண்குமார், தன்னை பற்றியும், தன் குடும்பத்தினர் பற்றியும் எக்ஸ் தளத்தில், சிலர் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அந்த தகவல்கள் பரப்பப்பட்ட கணக்குகளை ஆராய்ந்த போது சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனின் தூண்டுதலின் பேரில் பதிவிடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாகவும் வருண்குமார் தெரிவித்துள்ளார். இருவரின் மீதும் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தற்காலிகமாக எக்ஸ் தளத்தில் இருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.