அசாமில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அசாம் மாநிலம் நாகோனை சேர்ந்த 14 வயது மாணவி, 3 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதில் தொடர்புடைய தஃபசுல் இஸ்லாம் என்பவரை போலீஸார் கைது செய்து, சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிய அவர், அங்கிருந்த குளத்தில் குதித்தார். இந்நிலையில், கையில் விலங்கு அணிந்திந்த தஃபசுல் இஸ்லாம், நீந்த முடியாமல் உயிரிழந்தார்.
இதனிடையே, மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.