ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
மாரேடுபள்ளி கிராமத்தை சேர்ந்த காதர் பாஷா, அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதில் காதர் பாஷா, அவரது மனைவி ரேஹானா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.