மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 4 பேருடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
மும்பையிலிருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர், புனே மாவட்டம் பாட் வான்பரப்பில் பறந்தபோது மழை காரணமாக திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.