தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வனக்காப்பாளரை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கம்பம் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வனக்காப்பாளர் ரகுராம் பாண்டியனை சிறுத்தை தாக்கியதால் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட வன அலுவலர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து, சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்