தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் தொடர்ந்து 13-வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து 13-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.