இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது : “இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தருக்கு
அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் மூலமாகவும், சமுதாயத்திற்கு பலதரப்பட்ட சமூக சேவையாற்றி வரும் பாரிவேந்தர், நல்ல உடல் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற்று நீண்ட காலம் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.