இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தை பிடித்து உள்ளார்.
நாட்டில் சிறப்பாக பணியாற்றும் முதலமைச்சர்கள் குறித்து தனியார் நாளிதழ் கருத்துக் கணிப்பை நடத்தியது. நாடு முழுவதும் 30 மாநிலங்களை சேர்ந்த 1,36,463 பேரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
இதில், 33 சதவீதம் மக்கள் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன்படி நாட்டின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தை பிடித்து உள்ளார். டெல்லி முதலமைச்சர்அர்விந்த் கெஜ்ரிவால் 13.8 சதவீதம் ஆதரவு பெற்று 2-ம் இடத்தை பிடித்தார்.
அடுத்தப்படியாக 9.1 விழுக்காடு மக்கள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாகவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 4.7 விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்களித்ததனர்.