பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டின் கண்காட்சி ஆகஸ்ட் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பழனியில் இரண்டு நாட்கள் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். பக்தி இன்னிசையுடன் துவங்கிய மாநாட்டில் ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம், ஆன்மிக பாடல் நிகழ்ச்சி, வள்ளி திருமணம் நாடகம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முதல்நாளான நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மாநாட்டின் நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று ஏராளமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
முருகன் மாநாடு இன்றோடு நிறைவடைந்தாலும் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்கள் மற்றும் தொழில் வீடியோ காட்சிகளை ஒரு வாரத்துக்கு பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.