ரசிகர்களால் கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்பட்ட விஜயகாந்தின் பிறந்த நாள் இன்று. அவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவரது செயல்பாடுகளால் இன்றும் பல்வேறு தரப்பு மக்களாலும் போற்றப்படுகிறார். நடிகர் விஜயகாந்தின் திரையுலக பயணம் பற்றி பார்ப்போம்.
இந்த நாடே அழுகுதப்பா. இந்த டயலாக்கை முன்னாடியே தெரிஞ்சி படத்துல வெச்சாங்களான்னு தெரியல, ஆனா ஒட்டுமொத்த தமிழ்நாடே விஜயகாந்த் இல்லன்னு தெரிஞ்ச பின்ன கண் கலங்காத ஆட்களே இல்ல. இங்க ரஜினி ரசிகர்கள் கமல் ரசிகர்கள் விஜயகாந்த் ரசிகர்கல்ன்னு தனித்தனியா பிரிக்க முடியல ஒட்டு மொத்த தமிழ்நாடே திரண்டு வந்து கோயம்பேடுல இருக்கிற தேமுதிக அலுவலகத்தில் நின்னாங்க.
1979ல தமிழ் சினிமாவுல இன்னொரு ஒளி வருகிது அகல் விளக்கின் படம் மூலமா. அதுதான் விஜயகாந்த்.
அடுத்தடுத்து அஞ்சு படங்கள் விஜயகாந்த் பெயர் சொல்லி அடிக்கிற மாதிரி இருந்துச்சு. அட நீ என்ன இவ்ளோ கருப்பா இருக்க உனக்கு சினிமா செட் ஆகாது அப்படின்னு ஓடின இயக்குனர்கள் எல்லா விஜயகாந்துடைய அலுவலகத்துல கால் சீட்டுக்காக மணிக்கணக்கா நிக்க ஆரம்பிச்சாங்க.
அப்போ ரஜினி கமல் உச்சத்தில் இருந்த காலம், இவர்களுக்கெல்லாம் தனித்தனி ரசிகர்கள் இருந்தாங்க. அப்பதான் என்ட்ரி கொடுத்தாரு விஜயகாந்த். ஆனா விஜயகாந்த் மட்டும் எங்க வீட்டு பையனா என் பக்கத்து வீட்டு பையனும் தன் குடும்பத்தில ஒரு ஆளா பார்க்க ஆரம்பிச்சாங்க. அதனால ரஜினி ரசிகரா இருந்தாலும் சரி கமல் ரசிகரா இருந்தாலும் சரி விஜயகாந்துக்கு எப்போதுமே ஒரு கூட்டம் இருந்தது. இதுக்கு உதாரணம் சொல்லனும்னா ரஜினி கமல் அவர்களுடைய நூறாவது படம் தோல்வியை தான் தழுவிச்சி ஆனா விஜயகாந்த் உடைய கேப்டன் பிரபாகரன் படம் பெரிய ஹிட் அடிச்சுச்சு.
எம்ஜிஆர் நா இப்படி தான் இருந்தார் அவர் எல்லாத்துக்கும் உதவி செஞ்சாரு அவரோட படங்கள் எல்லாருக்கும் பிடிக்கும் ஆனால் அவரை நாங்கள் பார்த்ததில்லன்னு ஏங்கிட்டு இருந்த 80’s 90’s கிட்ஸ்க்கு கிடைச்ச வரப்பிரசாதம் தான் விஜயகாந்த். எல்லா படமும் மக்களுக்கு சில கருத்துக்கள் இருக்கும். ஊழல் திருட்டுன சட்ட விரோத செயல்களுக்கு எதிராக விஜயகாந்த் கொடுக்கிற குரல் அது படமா இருந்தாலும் யோசிக்க வைக்கும்.
இன்னும் சொல்லலனா அப்போ உள்ள இளைஞர்களுக்கு என் நாடு என் தேசம் என் ஊரு அப்படின்ற உணர்ச்சிகள் விஜயகாந்த் படத்தை பார்த்த பிறகு வந்தது என்றே சொல்லலாம்.
மதுரனா அழகரும் அழகர் திருவிழாவும். அந்த அழகரை பார்க்கும்பொழுது ஒலிக்கிற பாடல் விஜயகாந்த் படத்தில் கள்ளழகர் என்ற பாடல்.(வராரு வராரூ அழகர் வாராரு)மதுரை மக்களுக்கு இன்னொரு சாமின்னு சொல்லலாம் என்னமோ சாமியா வணங்கிட்டு வராங்க.
153 படங்கள்ல நடிச்ச விஜயகாந்த் 1984ல் மட்டும் 18 படங்களில் நடிக்கிற அளவுக்கு பிசியா இருந்திருக்கார்.
நூறாவது நாள் படத்துல போலீசா மாறினாரு விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன் படத்தில் கேப்டனா மாறினாரு. ரமணா படத்துல லஞ்சத்த ஒழிக்கிற மஹானா மாறினாரு. இப்படி சொல்லிட்டே போலாம்.
இல்லாதவனுக்கு கர்ணன தெரிஞ்சவரு.பசினு வந்தா வள்ளலாரா தெரிஞ்சவரு. இயலாதவர்களுக்கு பகத்சிங்ஹா கூட இருந்தவரு. விஜயகாந்த்தோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இனிவரும் காலத்துல அவருடைய புகழ் பேசப்படும். அப்படி பேசுறதுனால இன்னும் உயிரோட தான் நம்ம கூட வாழ்ந்துட்டு இருக்காரு விஜயகாந்த்.