மத்திய அரசின் கல்வியுடன் கூடிய ஊட்டச்சத்து திட்டம் முழுமையான வளர்ச்சிக்கு வித்திடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடியின் மனதின் குரல் உரையை மேற்கோள்காட்டி, எக்ஸ் வலைதளத்தில் பதிவு வெளியிட்ட அவர், செப்டம்பரை ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிப்பதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் கல்வியுடன் கூடிய ஊட்டச்சத்து திட்டம் முழுமையான வளர்ச்சிக்கு உதவிபுரிவதாக கூறிய அமைச்சர் எல்.முருகன், இதன்மூலம் இந்திய மாணவர்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வளர வாய்ப்பு கிடைத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து, சமஸ்கிருதத்தின் மேன்மையை பிரதமர் மோடி மனதின்
குரல் உரையில் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அவர், காலம் கடந்து நிற்கும் அந்த மொழியை பாதுகாப்பதில் பெருமிதம் கொள்வோம் என எல்.முருகன் கூறினார்.