திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 100 நாட்களில் 6.59 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்கவும், கடந்த மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி இந்த இ-பாஸ் தொடங்கியதில் இருந்து 100 நாட்கள் வரை 6 லட்சத்து 59 ஆயிரத்து 818 பயணிகள் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.