மதுரை வைகையாற்றில் படர்ந்து காணப்பட்ட ஆகாயத் தாமரைகளை தொண்டு நிறுவன ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சிம்மக்கல் கல்பாலம் பகுதியில் உள்ள வைகையாற்றில் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுவதாகவும், இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து தனியார் தொண்டு நிறுவன தாமாக முன்வந்து ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.