விடுமுறை தினத்தை ஒட்டி தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
கடந்த 2 மாதங்களாக ஒகேனக்கல் பகுதிக்கு நீரவரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது நீர்வரத்து சீராக வந்துக்கொண்டிருக்கிறது.
இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.