பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகிட வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிகளைச் செய்வதுதான் நமது கடமை. அதன் முடிவுகளை இறைவனிடத்தில் விட்டுவிட வேண்டும் என்ற தத்துவத்தை போதித்தவர் ஸ்ரீகிருஷ்ண பகவான்.
ஶ்ரீ கிருஷ்ணரின் போதனைகள் பல தலைமுறைகளைக் தாண்டி இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. நாம் நம்முடைய கடமையை நேர்மையாகவும், அர்ப்பணிப்போடும், விருப்பு-வெறுப்பு இல்லாமலும் செய்வதற்கு நமக்கு வழிகாட்டி வருகிறது.
பகவான் ஶ்ரீகிருஷ்ணர் நமக்கு காட்டிய உண்மை, நேர்மை ஆகிய பாதைகளை பின்பற்றி சமூகத்திற்கு நாம் தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும்.
இந்த இனிய நாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும், வளமும், ஒற்றுமையும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.