கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்பபடும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கிருஷ்ணர் உலகத்தில் தர்மத்தை நிலை நாட்டியவர் வாழ்வெல்லாம் கீரையை நமக்கு அருளியவர். கீதை வழி சென்றால் பாதை சரியாக இருக்கும் என உணர்த்தியவர்.கிருஷ்ணரின் பிறந்த நாளான இன்று கிருஷ்ணர் கோவிலுக்கு கோபாலபுரத்தின் கோபாலை தரிசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்தார்.
முருகர் மாநாடு நடந்தது. உண்மையில் ஜாதி மதம் ஏதும் பார்க்கவில்லை என்றால் முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் அவர் வேறுபாடு பார்க்கிறார் என்று அர்த்தம்.
நம்பிக்கைகள் வேறு. முதல்வராக இருக்கும்போது மற்றவர்களை தனது நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதை விட பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது எனது கருத்து.இப்போது வரை முதல்வர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. அவர்கள் வாழ்த்து தெரிவிக்காதது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை முதலமைச்சரின் எதிர்பார்த்தோம். முருகன் மாநாட்டை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் நேரில் போகவில்லை முருகன் என்றால் நேரில் சொல்ல மாட்டார் போல..
ஜாதி மத இன உணர்வுகளை வேற்றுமை பார்ப்பதில்லை ஹிந்து மதத்தை வேற்றுமையாக பார்க்கவில்லை என்றால் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க வேண்டும். அவரது நம்பிக்கையை தவிர்த்து மற்றவரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் பொறுப்பாக இருக்க வேண்டும். முதலமைச்சரிடம் இருந்து கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.